சினந்துமற்று அவர், தீ எழப் படைக்கலம் சிதறி, கனம் துவன்றியதுஎன, கரு மலை என, கடல் போல் அனந்தனும் தலைதுளக்குற, அமரர்கள் அரவின் மனம் துளக்குற,வளைத்தனர்,-எண் திசை மருங்கும்.
கனம் துவன்றியது -மேகம் நெருங்கியது. அனந்தன் - ஆதிசேடன். (39-2)