தலைஒடிந்திட அடித்தனன், சிலர்தமை; தாளின் நிலை ஒடிந்திடஅடித்தனன்; சிலர்தமை; நெருக்கிச் சிலை ஒடிந்திடஅடித்தனன், சிலர் தமை; வயப் போர்க் கலை ஒடிந்திடஅடித்தனன், அரக்கர்கள் கலங்க.
போர்க்கலை ஒடிந்திட- எதிர்ந்தார் கற்று வைத்திருந்த போர்த்திற அறிவு இல்லையாம்படி. (40-1)