451.

புலிப் போத்தின் வயவர் எல்லாம்-பொரு கரி, பரி,
                                 தேர், பொங்க.
கலித்தார்கள்உம்பர் ஓட, கடையுகத்து எறியும்
                                 காலின்

ஒலித்து, ஆழிஉவாவுற்றென்ன உம்பர் தோரணத்தை
                           முட்ட
வலித்தார் திண்சிலைகள் எல்லாம்; மண்டின
                           சரத்தின் மாரி.

      இப்பாடலை. 5736ஆம் பாடலோடு ஒப்பிடுக.             (23-1)