453.

செறி நாண்உரும் ஒலி கொண்டான்; ஒருபது
     திசைவாய்கிழிபட அழல்கின்றான்;
'இறுவாய், இதுபொழுது' என்றான்; எரி கணை
     எழு கார்மழை பொழிவது போல,
பொறிவாய் திசைதொறும் மின் தாரையின் நிலை
     பொலியச்சினமொடு பொழிகின்றான்;
உறு மாருதி உடல்உக வெங் குருதிகள்
     ஒழியாது,அவனொடு மலைவுற்றான்.

     ஒருபது திசை -எண்திசையோடு மேல், கீழ் சேர்ந்து பத்து எனல்
வழக்கு.                                             (32-1)