454.

மலைபோல்உறு புய வலி மாருதி சினம்
     வந்துஏறிட, எந்திரமும் தேர்த்
தொலையாது அவன்விடு சர மாரிகள் பல
    துண்டப்படும் வகை மிண்டி, தன்
வலி சேர்கரம்அதில் எழுவால் முழுவதையும்
     மண்டித்துகள் பட மடிவித்தான்;
புலிபோல் அடு சின நிருதன் கண்டு அழல்
     பொங்கிப்பொரு சிலை விளைவித்தான்.

     மிண்டி - நெருங்கி.நிருதன் - அக்ககுமாரன்.             (32-2)