என்றே,'இவன் இப்பொழுது என்கையினால் மடிந்தால் நன்றே மலர்மேல்உறை நான்முகன் ஆதி தேவர், "பொன்றோம் இனி என்றும்; இருந்து உயிர் போற்றுதற்கு நின்றே துயர்தீர நிறுத்தினன்" என்ப மன்னோ.'
இவன் -இந்திரசித்து. 'என்கையால் மடிந்தால் பிரமன் முதலிய தேவர்கள் நம்துன்பம் நீங்கச் செய்தான் என்று சொல்வர்' என்று அனுமன் நினைத்ததாம். (50-1)