465.

புகைந்து அரக்கர்கள் விடும் கொடும் படைகளைப்
                                 பொறியின்
தகைந்து, மற்றுஅவர் உடல்களைத் தலைகளைச்
                                சிதறி,
மிகும் திறல்கரி, பரி, மணித் தேர், இவை விளிய,
புகுந்துஅடித்தனன், மாருதி; அனைவரும் புரண்டார்.

     பொறியின் தகைந்து -கலை வன்மையால் தடுத்து.       (59-2)