469.

தன் உறைக்குஉறுகண் வெய்யோர்தாம் இயற்றலும்
                            கேட்டு, 'இன்னே,
அன்னவர்க்குஇறுதி ஆக, அணி நகர் அழிப்பல்'
                            என்னா,
செந் நிறச்சிகைய வெம் போர் மழு, பின்னர்ச்
                            சேறல் ஓக்கும்-
அல் நிறத்துஅண்ணல் தூதன் அனல் கெழு
                           கொற்ற நீள் வால்.

     தன் இறை - இராமன்.உறுகண் - துன்பம். அனுமன் வால். மழு
பின்னால் செல்வது போன்றது. மழு - நெருப்புப்படை. அனுமன் வாலில்
நெருப்பு வைத்தபடியால் அது திருமாலின் மழு போன்றதாயிற்று.    (135-1)