13. இலங்கைஎரியூட்டு படலம் | 471. | தெய்வநாயகி கற்பு எனும் செந் தழல் பெய்து மாருதிவாலிடைப் பேணியே, பொய் கொள் வஞ்சகப் புல்லர் புரம் எலாம் வெய்தின் உண்டதகைமை விளம்புவாம். |
சீதையின் கற்பு எனும்நெருப்பு மாருதி வாலிடைப் பாதுகாக்கப்பட்டு வஞ்சகப் புல்லர் நகரை அழித்தது என்றார். |