(முதற்செய்யுள்)

472.

தேர்எரிந்தன; எரிந்தன திரள் பரி எவையும்;
தார் எரிந்தன;எரிந்தன தருக்கு உறு மதமா;
நீர் எரிந்தன;எரிந்தன நிதிக் குவை; இலங்கை
ஊர் எரிந்தன;எரிந்தன அரக்கர்தம் உடலம்.

     தார் - மாலை. நீர்எரிதல் தீயின் மிகுதியால்.             (37-1)