476.

'தா இல்மேலவர்க்கு அருந் துயர் விளைத்திடின்,
                           தமக்கே
மேவும், அத்துயர்' எனும் பொருள் மெய்யுற,
                           மேல்நாள்
தேவர்தம்பதிக்கு இராவணன் இட்ட செந்
                           தழல்போல்,
ஓவிலாது எரித்துஉண்டமை உரைப்பதற்கு எளிதோ ?

     அழகான கருத்து.'மேலோர்க்குத் துன்பம் செய்தால் அத்துயர் தமக்கே
வரும்' என்பதற் கிணங்க. அமராவதிக்கு இராவணன் இந்திரசித்து மூலமாக
இட்ட நெருப்பு இலங்கையை எரி்த்தது என்பதாம்.              (43-1)