| 4768. | தடக்கைநால் - ஐந்து பத்துத் தலைகளும்உடையான் தானே அடக்கிஐம்புலன்கள் வென்ற தவப்பயன்அறுத லோடும், கெடக்குறி ஆக,மாகம் கிழக்குஎழுவழக்கு நீங்கி, வடக்கு எழுந்துஇலங்கை செல்லும் பிரிதிவானவனும் ஒத்தான். |
நால்ஐந்துதடக்கை -இருபது பெரிய கரங்களையும்; பத்துத் தலைகளும் - பத்துத் தலைகளையும்; உடையான் - உடைய இராவணன்; ஐம்புலன்கள் - ஐந்து புலன்களையும்; தானே அடக்கி - பிறர் உதவியின்றி ஒன்றியாக இருந்து ஒடுக்கி; வென்ற தவப்பயன் - வெற்றி கொண்ட தவத்தின் பயனான புண்ணியம்; அறுதலோடும் - அற்றுத் தீர்ந்தவுடன்; கெடக்குறி ஆக - உற்பாதமாக; மாகம் - வானத்தில்; கிழக்கு எழு வழக்கு நீ்ங்கி- கீ்ழ்த்திசையில் உதித்தலாகிய இயல்பிலிருந்து விலகி; வடக்கு எழுந்து - வடக்குத் திசையில் உதித்து; இலங்கை செல்லும் - இலங்கை நோக்கிப் போகும்; பிரிதி வானவனும் ஒத்தான் - சூரிய பகவானை ஒத்திருந்தான்.; தவப்பயன் -புண்ணியம். கெடக்குறி - ஒரு சொல். கெடலூழ் என்பதுபோல. (பெருங்கதை 25-168) கெட - கெட்டுப் போக; குறி - அடையாளமாய் என்றும் கூறலாம். (28) |