4777. | 'ஓசனை உலப்பு இலாத உடம்புஅமைந்துடைய' என்னத் தேசமும் நூலும்சொல்லும் திமிங்கிலகிலங்களோடும் ஆசையை உற்றவேலை கலங்க,அன்று அண்ணல் யாக்கை வீசிய காலின்வீந்து மிதந்தன,மீன்கள் எல்லாம்.* |
உலப்பிலாதஉடம்பு - அழிவற்ற உடலானது; ஓசனை அமைந்து உடைய என்ன - ஒரு யோசனை தூரம் பெற்றுள்ளது என்று; தேசமும் நூலும் சொல்லும் - உலக மக்களும் புராணங்களும் கூறுகின்ற; திமிங்கிலகிலங்களோடும் - திமிங்கில கிலம் என்னும் கடற் பிராணியுடன்; ஆசையை உற்ற வேலை - திக்குகளை அளவிய கடல்கள்; கலங்க - கலக்கம் அடைய; அன்று - கடலைத் தாண்டிய தினத்தில்; அண்ணல் யாக்கை வீசிய காலின் - அனுமன் திருமேனியானது உந்தித் தள்ளிய காற்றினாலே; மீன்கள் எல்லாம் - கடல் மீன்கள் யாவும்; வீந்து மிதந்தன - இறந்து மிதந்தன. அனுமன் வேகமாகச்சென்றதனால் உண்டான காற்றால் கடலும் திமிங்கல கிலங்களும் கலங்கின. மீன்கள் இறந்தன. திமிங்கிலத்தை உண்ணும் பிராணியைத் திமிங்கில கிலம் என்பர். கிலம் - அழிவு. (37) |