| 4786. | நிறம்குங்குமம் ஒப்பன, நீல்நிறம் வாய்ந்தநீரின் இறங்கும் பவளக்கொடி சுற்றின, செம்பொன்ஏய்ந்த பிறங்கும்சிகரம் படர் முன்றில்தொறும், பிணாவொடு உறங்கும்மகரங்கள் உயிர்ப்பொடு உணர்ந்துபேர,* | குங்கும நிறம்ஒப்பன - குங்கும நிறத்தை ஒத்திருப்பவையும்; நீல்நிறம்வாய்ந்த - நீலநிறம் பெற்றவையும்; நீரின் இறங்கும் பவளக் கொடி சுற்றின- தண்ணீரிலே வேரை வீழ்த்திய பவளக் கொடியால் சுற்றப் பெற்றவையும்;செம்பொன் ஏய்ந்த - செம்பொன்னை ஒத்தவையும்; பிறங்கும் சிகரம்படர் -விளங்குகின்ற சிகரத்தில் பரவிய; முன்றில் தொறும் - முற்றங்கள் தோறும்;பிணாவொடு உறங்கும் மகரங்கள் - பெட்டைகளுடன் உறங்குகின்றமகரமீன்கள்; உணர்ந்து உயிர்ப்பொடு பேர - உறக்கம் நீங்கிப் பெருமூச்சுடன் பெயர்ந்து செல்ல. மைந்நாகமலையின் சிகரங்கள் குங்குமத்தைப் போலவுள்ளன. நீலநிறம் பெற்றுள்ளன. பவளக் கொடியால் சுற்றப்பட்டுள்ளன. பொன் போன்றன. அம் மலையின் முற்றங்களில் மகரமீன்கள் பெட்டையுடன் உலாவுகின்றன. (46) |
|
|
|