4788.

பல்ஆயிரம் ஆயிரம் காசு இனம்
     பாடு இமைக்கும்
கல் ஆர் சிமயத்தடங் கைத்தலம்
     நீண்டுகாட்டி,
தொள்ஆர்கலியுள் புக மூழ்கி
     வயங்குதோற்றத்து
எல்ஆர் மணிஈட்டம் முகந்து,
     எழுகின்றதுஎன்ன*.

     பல் ஆயிரம்ஆயிரம் -கணக்கற்ற; காசுஇனம் பாடு இமைக்கும் -
மணிகளின் வகைகள் சுற்றுப் பக்கங்களில் ஒளி வீசுகின்ற; கல் ஆர் தட
சிமையம் -
கற்கள் நிரம்பிய விசாலமான மலையுச்சியாகிய; கைத்தலம் நீண்டு
காட்டி -
கைகளை மேலே உயர்த்திக் காட்டி; தொல் ஆர்கலி உள்புக
மூழ்கி -
பழமையான கடலில் முத்துக்கள் பெற நன்றாக முழுகி; வயங்கு
தோற்றத்து -
விளங்குகின்ற பொலிவினையுடைய; எல்ஆர் மணி ஈட்டம் -
ஒளி மிக்க மணித் தொகுதிகளை; முகந்து எழுகின்றது என்ன - வாரிக்
கொண்டு மேலே வருபவனைப் போல,

     மைந்நாகமலைகடலில் முழுகி மணிகளை வாரிக்கொண்டு மேலே
எழுவதைப் போன்றிருந்தது. மலைச் சிகரங்கள் கைகளைப்
போன்றிருந்தன.(48)