4796. | 'கார்மேகவண்ணன் பணிபூண்டனன் காலின்மைந்தன் தேர்வான்வருகின்றனன் சீதையைத் தேவர்உய்யப் பேர் வான் அயல்சேறி; இதில் பெறும் பேறு இல்'என்ன நீர்வேலையும்என்னை உரைத்தது" நீதிநின்றாய் |
நீதி நின்றாய்-ஒழுக்கத்தில் நிலைத்து நிற்பவனே !; கார்மேக வண்ணன் - கருத்த மேகம் போன்ற நிறமுடைய இராமபிரானின்; பணி பூண்டனன் காலின் மைந்தன் - கட்டளை மேற்கொண்ட வாயுதேவனின் புத்திரன்; தேவர் உய்யச் சீதையைத் தேர்வான் வருகின்றனன் - தேவர்கள்வாழ வேண்டும் என்று சீதா பிராட்டியைத் தேடும்பொருட்டு வருகின்றான்;பேர் வான் அயல் சேறி - பெரிய ஆகாயத்தின் பக்கத்தில் சேர்வாயாக;இதில் - இதைவிட; பெரும்பேறு இல் என்ன - பெரிய பாக்கியம் இல்லை என்று; என்னை - என்னிடத்தில்; நீர் வேலையும் உரைத்தது - நற்பண்பு வாய்ந்த கடலும் கூறிற்று. இராமபிரானின்கட்டளை மேற்கொண்டு வாயு புத்திரன் சீதையைத் தேடி வருகின்றான். நீ அவனுக்கு உதவுக என்று கடல் கூறிற்று என்று மைந்நாகமலை பேசிற்று. பணி - கட்டளை; பூண்டனன் - முற்றெச்சம். கால் - காற்று. (வாயு தேவன்) நன்நெடுங்காலின் மைந்தன் நாமமும் அனுமன் (சுந் - உரு 31) (56) |