கலிநிலைத்துறை

4813. 

கீதங்கள்இசைத்தனர் கின்னரர்
     கீதம்நின்ற
பேதங்கள்இயம்பினர் பேதையர்
     ஆடல்மிக்க
பூதங்கள்தொடர்ந்து புகழ்ந்தன
     பூசு ரேசர்
வேதங்கள்இயம்பினர் தென்றல்
     விருந்துசெய்ய.

     கின்னரர்கீதங்கள் - கின்னரர்கள்பாடல்களை; இசைத்தனர் -
பாடினார்கள் ; பேதையர் கீதம் நின்ற - மகளிர்கள் பாடல்கள் அமைந்த;
பேதங்கள் இயம்பினர் -
இசை விகற்பங்களைப் பாடினார்கள்; ஆடல்மிக்க
பூதங்கள் -
ஆடுதலிற் சிறப்புப் பெற்ற பூத கணங்கள்; தொடர்ந்து புகழ்ந்தன- விடாமற்
 போற்றின; பூசுரேசர் - தலைசிறந்த அந்தணர்கள்;
வேதங்கள் இயம்பினர் - வேதங்களை இசைத்தனர்; தென்றல் வி்ருந்து
செய்ய -
தென்றல் காற்று புதியஊக்கத்தை வழங்க.

     அனுமனின் அரியசெயலைக் கண்டு கின்னரர் முதலானவர்கள்
கொண்டாடியதைப் பேசுகிறது.                             (73)