4821. | பெண்பால்எனக்கருது பெற்றியொழி உற்றால் விண்பால்அவர்க்குமுயிர் வீடுறுதல் மெய்யே கண்பால்அடுக்கவுயர் காலன்வரு மேனும் உண்பேன்ஒருத்தியது ஒழிப்பதரி தென்றாள். |
(அனுமன் மொழி கேட்டஅங்கார தாரை) பெண்பால்எனக்கருது பெற்றி ஒழி - (என்னை) ஒருபெண்தானே என்று நினைக்கும் தன்மையை விட்டுவிடு; உற்றால் - என்எதிரே வந்தால்; விண்பால் அவர்க்கும் - தேவ லோகத்தில் உள்ள தேவர்க்கும்; உயிர் வீடுறுதல் மெய்யே - உயிரானது உடம்மை விடுதல் உறுதியாகும்; கண்பால் - என்னுடைய கண்ணின் பக்கம்; உயர் காலன் அடுக்க வருமேனும் - யமன் அணுக வருமேயாயினும்; உண்பான் அருத்தியது -உண்ணவிரும்பிய செயலை; ஒழிப்பது அரிது -விலக்க முடியாது; என்றாள் - என்று கூறினாள். அரக்கி அனுமனைநோக்கி "என்னைப் பெண்தானே என்று கருதாதே; எனக்கு முன் வந்தால் உண்பேன்" என்று கூறினாள். பெற்றி - தன்மை. வீடுவது - அழிவது. மெய் -உறுதி. (81) |