4832. 

நல்நகர்அதனை நோக்கி
     நளினக் கைமறித்து 'நாகர்
பொன்னகர் இதனைஒக்கும்
     என்பதுபுல்லிது அம்மா
அந்நகர் இதனில்நன்றேல்
     அண்டத்தைமுழுதும் ஆள்வான்
இந்நகர் இருந்துவாழ்வான் ?
     இது அதற்குஏது என்றான்.+

(அனுமன்)

     நல்நகர்அதனை நோக்கி - அழகிய இலங்கை மாநகரைப் பார்த்து;
நளினக்கை மறித்து - தாமரை போன்ற கையை அசைத்து; நாகர்
பொன்நகர்-
தேவர்களின் அமராவதி நகரானது; இதனை ஒக்கும் என்பது
-
இந்தஇலங்கையைப் போன்றிருக்கும் என்று கூறுவது; புல்லிது -
அறிவற்றது;அம்மா - இங்ஙனம் கூறுவது அதிசயம்; இதனில்- இந்த
இலங்கையை விட;அந்நகர் நன்றேல் - அழகுடையதாயிருக்குமானால்;
அண்டத்தை முழுதும்ஆள்வான் - அண்டங்கள் யாவற்றையும் ஆளும்
இராவணன்; இந்நகர்இருந்து வாழ்வான் ? - இந்த இலங்கையிலிருந்து
வாழ்வானோ; 
அதற்கு - இந்நகர் அதனினும்சிறந்தது என்ற கருத்துக்கு; இது
ஏது -
இது காரணம் ஆகும்; என்றான்.

     
எல்லா அண்டங்களுக்கும்உரிய இராவணன் தலைநகராக
இலங்கையைக்கொண்டதனால் அமராவதியினும் சிறப்புடைத்து என்று
தெரிகிறது.அனுமானத்தில் மேற்கோளை (பிரதிக்கிளை) உறுதிப்படுத்தும்
வசனத்தை ஏதுஎன்றும், ஏது வாசகம் என்றும் பக்கதன்ம வசனம் என்றும்
கூறுவர். இலங்கைஅமராவதியினும் சிறந்தது என்பது மேற்கோள் (பிரதிக்னை).
அதனைமெய்ப்பிக்க மேற்கொண்ட ஏது அண்டங்களுக்குத் தலைவன்
இலங்கையைத்தலைநகராகக் கொண்டுள்ளான் என்பது. இங்கே ஏது என்றது
ஏது வாசகத்தை.ஏது என்பது தர்க்கத்தில் பேசப்படும் ஏதுவேயன்றிச் சாதாரண
காரணம்அன்று. நன்னகர் - அழகிய நகர். இங்கு நல் என்பது அழகு என்னும்
பொருள் தரும். நல்லிசை யாழ் என்னும் தொடருக்கு அழகிய இசையுடைய
யாழ் என்று உரை கூறப்பெற்றது (புறப்பொருள் வெ.மா. 2.2.10).        (92)