4862.

பொன்னின் மால்வரைமேல் மணி பொழிந்தன
                                 பொருவ
உன்னி,நான்முகத்து ஒருவன் நின்று ஊழ்முறை
                                 உரைப்ப
பன்னி, நாள்பலபணிஉழந்து, அரிதினில்
                                 படைத்தான்-
சொன்ன வானவர்தச்சனாம்,இந்நகர் துதிப்பான்.
 

     நான்முகத்துஒருவன் - நான்கு முகங்களைப் பெற்ற பிரம்மதேவன்;
பொன்னின் மால்வரைமேல் -
பெரிய பொன்மயமான மேருமலைபோல்;
மணி பொழிந்தன பொருவ -
மாணிக்கத்தைச் சொரிவன ஒப்ப; பன்னி -
(தேவதச்சனைப்) புகழ்ந்து; நின்றுஉன்னி - உறுதியுடன் ஆராய்ந்து;
ஊழ்முறைஉரைப்ப -
நகர் அமைய வேண்டிய முறையைக் கூற; சொன்ன
வானவர்தச்சன் -
பிரம்மனால் சொல்லப்பெற்ற தேவதச்சன்;  பலநாள் -
பலநாட்கள்; பணி உழந்து - வருந்திப் பணியை மேற்கொண்டு; இந்நகர் -
இந்த இலங்கை மாநகரை; துதிப்பான் - உலகம் கொண்டாடும்படி;
அரிதினில்படைத்தான் -
அருமையாகச் சிருட்டித்தான்.

    நன்கு பணிசெய்யும் பொருட்டுப் பணியாளனைப் புகழ்வது சால்பென்க.
சொர்ணாபிஷேகம் என்னும் வழக்கை நோக்கவும். பொன்னின் மலைமேல்
மணி பொழிந்தாற்போலத் தேவதச்சன், இந்நகரைப் படைத்தான் என்று
பொருள் கூறப்பெற்றது.                                   (28)