4873.

ஒறுத்தலோநிற்க; மற்று ஓர்
     உயர்படைக்கு ஒருங்குஇவ் ஊர் வந்து
இறுத்தலும்எளிதாம் ? மற்றும்
    யாவர்க்கும் இயக்கம் உண்டே ?
கறுத்த வாள்அரக்கி மாரும்
     அரக்கரும்கழித்து வீசி
வெறுத்த பூண்வெறுக்கையாலே
     தூரும், இவ்வீதி எல்லாம்.

     ஒறுத்தல் (ஒ)நிற்க - (படைகள்) பகைவர்களைக் கொல்வது
கிடக்கட்டும்; மற்று ஓர் உயர்படைக்கு - வேறு ஒரு உயர்ந்த படைக்கு;
ஒருங்கு இவ் ஊர் வந்து -
ஒரு சேர இந்த ஊரைச்சார்ந்து; இறுத்தலும்
எளிதாம் -
தங்குவதும் எளிதான செயலே; கறுத்த வாள் - கோபம் கொண்டகொடிய; அரக்கி மாரும் -  அரக்கப் பெண்களும்; அரக்கரும் -
அரக்கர்களும்; கழித்து - ஒதுக்கி; வீசிவெறுத்த - எறிந்த
வெறுப்புக்கொண்ட;பூண் வெறுக்கையாலே - ஆபரணச் செல்வங்களால்;
தூரும் - 
மேடிட்டுக்கிடக்கும்;இவ் வீதி எல்லாம் - இந்த எல்லா வீதிகளிலும்;
யாவர்க்கும் -
எல்லார்க்கும்; இயக்கம் உண்டே - இயங்குதல் முடியுமா ?.

    அரக்கர்கள்இன்பம் உறும்போது இடையூறு என்று கருதி
ஆபரணங்களை வீசி விட்டனர் (வால்மீகி)                        (39)