அனுமன்பவளக்குன்றில் இருத்தல் 4876. | என்றனன்,இலங்கை நோக்கி இனையனபலவும் எண்ணி, நின்றனன்;அரக்கர் வந்து நேரினும்நேர்வர் என்னாத் தன்தகை அனையமேனி சுருக்கிஅச்சரளச் சாரல் குன்றிடைஇருந்தான்; வெய்யோன் குடகடல்குளிப்ப தானான். |
(அனுமன்) இலங்கைநோக்கி - இலங்கையைப் பார்த்து; (மதி முட்டுவன மாடம் - (உளர்) விற்படை பெரிது என்கோ 43); என்றனன் - இவ்வாறு கூறினான்; இனையன - இப்படிப்பட்ட; பலவும் - பலவற்றையும்; எண்ணி - சிந்தித்து; நின்றனன் - நின்றான்; அரக்கர் - கொடிய அரக்கர்கள்; வந்து - முன்னே வந்து; நேரினும் நேர்வர் - எதிர்த்தாலும் எதிர்ப்பர்; என்னா - என்று சிந்தித்து; தன்தகை அனைய - தன்னுடைய தகுதிக்குப் பொருத்தமான; மேனி சுருக்கி - திருமேனியைச் சுருக்கிக் கொண்டு; அச்சரளச்சாரல் - அந்த தேவதாரு மரங்கள் நிறைந்த அடிவாரத்தைப் பெற்ற; குன்றிடை இருந்தான் - பவளமலையில் இருந்தான்; (அப்போது) வெய்யோன் - சூரியன்; குட கடல் குளிப்பதானான் - மேற்குக் கடலில் மறைவதானான். அனுமன் இவ்வாறுசிந்தித்தபின் அரக்கர்கள் போருக்கு வந்தாலும் வருவர் என்று கருதித் தன்னுடைய மேனியைச் சுருக்கிப் பவளமலையில் இருந்தான். 'விசும்பிடைச் செல்லும் வீரன் - பவளமால் வரையில் பாய்ந்து,' 'முட்டுவன மாடம்' 'படை பெரிது என்கோ' (கம்ப. 4829, 4835, 4875) என்றனன் என்பது கம்பர் கண்ட மாட்டு. (42) |