4884.

தேவரும் அவுணரும் செங்கண் நாகரும்
மேவரும் இயக்கரும், விஞ்சை வேந்தரும்,
ஏவரும் விசும்புஇருள்இரிய ஈண்டினார்,
தாஅரும் பணிமுறைதழுவும் தன்மையார்.

     தேவரும் அவுணரும்- தேவர்களும் அசுரர்களும்; செங்கண் நாகரும்- சிவந்த கண்களையுடைய நாகலோகத்தவர்களும்; மேவுஅரும்
இயக்கரும் -
எல்லோரும் விரும்பும் யட்சர்களும்; விஞ்சை வேந்தரும் -
வித்தியாதரத்தலைவர்களும்; யாவரும் - (கூறப்பெறாத) மற்றவர்களும்; தா
அரும் பணி -
தீமை அற்ற வேலைகளை; முறை தழுவும் - கிரமப்படி
மேற்கொள்ளும்;தன்மையார் - இயல்பை உடையவராய்; விசும்பு -
ஆகாயத்தின்கண்; இருள்இரிய - இருளானது சிதறி ஓடும்படி; ஈண்டினார் -
ஒன்று கூடினார்கள்.

    தேவர்கள்முதலானவர்கள், தங்கள் தங்கள் பணியைச் செய்ய இருள்
சிதறியோடும்படி விண்ணில் ஒன்று கூடினர். அவுணர் - அசுரர் - இவர்கள்
இரவில் பணிபுரிபவர்.                                     (50)