நிலவு தோன்றிப்பரவுதல்

4886.

தீண்டஅருந் தீவினை தீக்கத் தீந்து போய்
மாண்டு அறஉலர்ந்தது; மாருதிப் பெயர்
ஆண்தகைமாரிவந்து அளிக்க, ஆயிடை
ஈண்டு அறம்முளைத்துஎன முளைத்தது இந்துவே.

     தீண்ட அரு -எவரும்அணுக முடியாத (கொடிய); தீவினை - தீய
பாவங்கள்; தீக்க - சுட்டுப் பொசுக்க; தீந்து போய் - கருகிப் போய்;அறம்
-
அறமானது (தருமமானது); மாண்டு - மடிந்து; அற உலர்ந்தது -
பசையற்றுக் காய்ந்து போயிற்று; மாருதிப் பெயர் - மாருதி என்னும்
பெயரைப் பெற்ற; ஆண்தகை மாரி - ஆண்மை மிக்க மழையானது; வந்து
அளிப்ப -
இலங்கைக்கு வந்து திருவருள் செய்ய; ஆயிடை - அப்போது;
ஈண்டு -
இந்த உலகத்தில்; முளைத்து என - முளைத்தால் போல; இந்து -
சந்திரன்; முளைத்தது - உதயம் ஆயிற்று.

     தீவினையால்தீய்ந்துபோன தருமம், அனுமன் என்னும் மழையால் மீய
முளைத்ததைப் போல சந்திரன் உதித்தான் மீண்டு அறம் முளைத்த
வெண்ணிலா' என்ற பாடமும் சிறப்புடைத்து.                       (52)