4888. | கற்றைவெண்கவரிபோல் கடலின் வெண்திரை சுற்றும் நின்றுஅலமர, பொலிந்து தோன்றிற்றால்- 'இற்றது என்பகை'என எழுந்த இந்திரன் கொற்றவெண்குடைஎனக் குளிர்வெண் திங்களே. |
என்பகை -என்னுடையஅரக்கப் பகை; இற்றது என - இறந்துவிட்டதுஎன்று (பூரித்து); எழுந்த - (உலாவச் செல்லப்) புறப்பட்ட; இந்திரன் -இந்திரனுடைய; வெண்கொற்றக்குடை என - வெண்கொற்றக் குடை போல;குளிர்வெண்திங்கள் - குளிர்ந்த வெள்ளிய பூரண சந்திரன்; கடலின்வெண்திசை - கடலில் உள்ள வெண்மையான அலைகள்; கற்றை - தொகுதியான; வெண்கவரி போல் - வெண்சாமரையைப் போல; சுற்றி நின்று அலமர - சுற்றுப் பக்கத்தில் இருந்து சுழன்று சுழன்று அசைய; பொலிந்து தோன்றிற்று - பொலிவு பெற்று விளங்கிற்று. எழுந்த -புறப்பட்ட 'அருட்கொம்பு ஆயினான் எழுந்திலன்' (கம்ப. 754.) ஆல், அசை. (54) |