| 4889. | தெரிந்துஒளிர் திங்கள் வெண்குடத்தினால், திரை முரிந்து உயர்பாற்கடல் முகந்து, மூரிவான் சொரிந்ததேஆம்என துள்ளும் மீனொடும், விரிந்தது;வெண்நிலா மேலும் கீழுமே. |
மூரிவான் -பெரியஆகாயம்; தெரிந்து - உலகுக்கு நன்மை செய்ய எண்ணி; ஒளிர் - ஒளிவீசுகின்ற; திங்கள் வெண்குடத்தினால் - சந்திரனாகியகுடத்தினாலே; திரை முரிந்து உயர் - அலைகள் மடங்கி மடங்கி எழுகின்ற; பாற்கடல் முகந்து - பாற்கடலையே முகந் தெடுத்து; சொரிந்ததே என - கொட்டியது என்று கூறும்படி; வெண்நிலா - வெண்மையான நிலாவெளிச்சம்; மேலும் கீழும் - மலைப்புறத்திலும், தரைப்புறத்திலும்; துள்ளும் - துள்ளுகின்ற; மீனொடும் விரிந்தது - நட்சத்திரங்களுடன் பரவிற்று. ஆகாயம் உலகுக்குநன்மை செய்ய எண்ணிப் பாற்கடலையே முகந்தெடுத்துப் பொழிந்தாற் போல நிலாவின் வெளிச்சம் எங்கும் பரவிற்று (கம்ப.549) மூரிவான் -எழுவாய்; சொரிந்தது - பயனிலை. ஆம், ஏ, அசைகள் (55) |