489.

கேட்டவன்,'யாவரே அம் மதுவனம் கேடு
                              சூழ்ந்தார் ?
காட்டிர்' என்றுஎழுந்தான்; அன்னார்,'வாலி சேய்
                             முதல கற்றோர்
ஈட்டம் வந்துஇறுத்தது ஆக, அங்கதன் ஏவல்
                                 தன்னால்,
மாட்டின,கவியின் தானை, மது வளர் உல வை
                                 ஈட்டம்.

     மதுவளர் உலவை -தேன்கூடு.                          (11-8)