4897. | கலங்கல்இல் கடுங்கதிர்கள், மீது கடிது ஏகா, அலங்கல் அயில்வஞ்சகனை அஞ்சி, எனின் அன்றால் இலங்கை மதில்இங்கு இதனை ஏறல்அரிது என்றே விலங்கிஅகல்கின்றன, விரைந்து என வியந்தான். |
கலங்கல் இல் -நிலையிலிருந்து பிறழாத; கடு்ங்கதிர்கள் - வெப்பமானசூரியர்கள்; அலங்கல்அயில் - வெற்றிமாலையணிந்த வேலேந்திய;வஞ்சகனை - வஞ்சகனாகிய இராவணனுக்கு; அஞ்சி - பயப்பட்டு; மீது -இலங்கை நகருக்கு மேலே; கடிது ஏகா எனின் - வேகமாகப் போகாது என்றுகூறப்பெறின் (அது); அன்று உண்மையன்று; இங்கு - இங்கே தெரிகின்ற;இலங்கை மதில்தனை - இலங்கையின் மதிலை; ஏறல் அரிது - கடந்துபோவது கடினம்; என்று - என்று மனத்திலே நினைந்து; விரைந்து -வேகமாக; விலங்கி அகல்கின்றன - ஒதுங்கி அப்பாற் போகின்றன;எனவியந்தான் - என்று (அனுமன்) அதிசயமுற்றான். கதிர்கள்பன்னிரண்டு என்பது புராண வழக்கு. இதுபற்றிக் கதிர்கள் என்றான். கடுங்கதிர் என்றதனால் சூரியர்கள் பேசப்படுகின்றார்கள். ஊர்தேடு படலம் 21 ஆம் பாடல் இந்தக் கருத்தையே பேசிற்று. அங்கு சூரியனே குறிக்கப் பெறுகிறான். கதிர்கள், சூரியனின் கிரணங்கள் என்று பொருள் செய்தாரும் உளர். மதிள் இஞ்சிதனைஏறல் - என்னும் பாடம் இருந்ததுபோலும் பாகார் இஞ்சிப் பொன்மதில் (கம்ப. 4916.) என்னும் பகுதியை நினைக்கவும். (63) |