4898.

தெவ் அளவுஇலாத; இறை தேறல் அரிது அம்மா !
அவ்வளவு அகன்றதுஅரண், அண்டம் இடையாக
எவ் அளவின்உண்டு வெளி ! ஈறும், அது ! என்னா,
வெவ்வள அரக்கனைமனக்கொள வியந்தான்.

     தெவ் - இராவணன் கவர்ந்தபொருள்கள்; அளவு இலாத -
அளவற்றுள்ளன; இறை தேறல் - (அதுபற்றி) சிறிய அளவு தெளிதலும்;
அரிது - மி்கக் கடினம்; அரண் - (அப்பொருள் குவித்துள்ள)
கோட்டையானது; வெளி - ஆகாயம்; அண்டம் இடை ஆக - அண்டங்கள்
தங்குவதற்கு இடமாக; எவ் அளவின் உண்டு - எந்த அளவுக்கு
இருக்கிறதோ; அவ்அளவு - அந்த அளவுக்கு; அகன்றது - பரந்திருக்கிறது;
ஈறும் - கோட்டையின் உயர்வும்; அது - அந்த ஆகாயம் போன்றது; என்னா
-
என்று கருதி; வெவ்வள அரக்கனை - கொடுஞ்செல்வம் பெற்ற
இராவணனை; மனக்கொள - மனம் கொள்ளும்படி; வியந்தான் -
அதிசயித்தான்.

     இடை - இடம்.தெவ்வுதல் - கொள்ளையடித்தல் அது -
அதுபோன்றதே. (திருக்குறள் நுண்மாலை) மணங்கொள என்பது மணக்கொள
என வந்தது வழி எதுகை நயங்கருதினான் போலும்.               (64)