4906. | எவ்அமரர், எவ் அவுணர், ஏவர் உளர் - என்னே !- கவ்வைமுதுவாயிலின் நெடுங்கடை கடப்பார் ? தெவ்வர் இவர்;சேமம்இது; சேவகனும் யாமும் வெவ்வமர்தொடங்கிடின் எனாய் விளையும் ? என்றான். |
கவ்வை - ஆரவாரம் மிக்க;முதுவாயிலின் - பழமையான கோபுரவாயிலின்; நெடுங்கடை - நீண்ட முற்றத்தை; கடப்பார் - கடந்து செல்ல வல்லவர்கள்; எ அமரர் - எந்தத் தேவர்குழுவில்; எ அவுணர் - எந்த அசுரர் குழுவில்; ஏவர் உளர் - எவர்கள் இருக்கின்றார்கள்; என்னே - என்ன அதிசயம்; தெவ்வர் இவர் - பகைவர்கள் இத்தகையவர்; சேமம் இது - பாதுகாப்பு இத்தகையது (என்றால்); சேவகனும் யாமும் - இராமபிரானும் யாங்களும்; வெவ் அமர் தொடங்கிடின் எனாய் விளையும் - கொடிய போரைத் தொடங்கினால் எதுவாக முடியுமோ; என்றான் - என்று (அனுமன்) சிந்தித்தான். நெடுங்கடை -நீண்டமுற்றம் - ,முரசெய்து ! கடைத்தலை (பால- கையடை-10) (72) |