4907.

கருங்கடல்கடப்பது அரிதுஅன்று; நகர் காவற்
பெருங்கடல்கடப்பது அரிது; எண்ணம் இறைபேரின்
அருங்கடன்முடிப்பது அரிதுஆம்; அமர் கிடைக்கின்
நெருங்கு அமர்விளைப்பர் நெடுநாள் என
                                 நினைந்தான்.

     கருங்கடல்கடப்பது - ஆழமான கடலைத்தாண்டுவது; அரிது அன்று- பெருஞ்செயல் அன்று; நகர் - நகரிலே அமைந்த; காவல்
பெருங்கடல் -
காவலாகிய பெரிய கடலை; கடப்பது அரிது - கடந்து
செல்வதுபெருஞ்செயல்; எண்ணம் - என்னுடைய ஆலோசனை (உணர்வின்
வயப்பட்டு); இறை பேரின் - சிறிது பிறழ்ந்தால்; அருங்கடன் - பிராட்டியைக்காண்பதாகிய கடமையை; முடிப்பது அரிது ஆம் -
நிறைவேற்றுதல்முடியாமல்போம்; அமர் கிடைக்கின் - (இவர்கட்கு) போர்
செய்யும்வாய்ப்புக்கிட்டினால்; நெடுநாள் - பலமாதங்கள்; நெருங்கு அமர் விளைப்பர்- செறிவான போரை வளர்ப்பார்கள்; என நினைந்தான் -
என்று (அனுமன்)சிந்தித்தான்.

     அனுமன் வீரன்ஆகையால் பகைவரைக் கண்டதும் உணர்ச்சி
வயப்பட்டான். நிலைதெரிந்து அடங்கினான்.

     ஆழக் கடல் கருமைநிறம் பெறும். ஆதலின் கருங்கடல் என்பதற்கு
ஆழமான கடல் என்று கூறப்பெற்றது.                         (73)