இலங்காதேவிஅனுமனைத் தடுத்தல் சந்தக்கலித்துறை | 4909. | நாள்நாளும்தான் நல்கிய காவல் நனிமூதூர் வாழ்நாள்அன்னாள் - போவதின் மேலே வழி நின்றாள்; தூண் ஆம்என்னும்தோள் உடையானை - சுடரோனைக் காணா வந்தகட்செவி என்னக் கனல் கண்ணாள். |
(அவ்வமயத்தில்) நாள் நாளும் -தினந்தோறும்; தான் - தன்னால்; காவல் நல்கிய - பாதுகாப்பு வழங்கப்பெற்ற; நனி மூதூர் - மிகப் பழமையான இலங்கையின்; வாழ்நாள் அன்னாள் - ஆயுட்காலம் போன்றவளும்; சுடரோனை - ஒளிவீசுகின்ற சூரியனை; காணா வந்த - கண்டு விழுங்குவதற்கு வந்த; கட் செவி என்ன - பாம்பைப் போல; கனல் கண்ணாள் - நெருப்பைக்கக்கும் கண்களையுடையவளும்; தூணாம் என்னும் - தூணே நிகராகும் என்று கூறத்தக்க; தோள் உடையானை - தோள்களைப் பெற்ற அனுமன்; போவதின் வழி மேலே - செல்லும் வழியின் கண்ணே; நின்றாள் (மறித்து) - நிற்பவளும். தோளுடையானை - ஐ- சாரியை இரண்டன் உருபு அன்று யாவும் சூனியம், சத்து எதிர் - என்று கூற வேண்டியதை "யாவையும் சூனியம் சத்து எதிர்" என்றார் மெய்கண்டார். பாடிய காரர் இரண்டன் உருபு விரியாமையைக் கண்டு தெளிக. மலைப் பாம்புபோல் ஐ பாட்டிலுள்ளது. இரண்டன் உருபு என்று கருதிப் பாடபேதம் செய்தவர் உளர். மா - மா -விளம் - மா - காய் என்னும் சீர்களை முறையே பெற்றுவரும் இந்த யாப்பை வடநூலார் 'மத்தமயூரம்' என்பர், இத்தகைய பாடல்கள் இந்நூலுள் 154 உள்ளன (மணிமலர் 76) (75) |