491.

என உரைத்து,அசனி என்ன எழுந்து, இரைத்து,
                                 இரண்டுகோடி
கனை குரல்கவியின் சேனை 'கல்' எனக் கலந்து
                                 புல்ல,
புனை மதுச் சோலைபுக்கான்; மது நுகர் புனிதச்
                                 சேனை,
அனகனைவாழ்த்தி, ஓடி அங்கதன் அடியில் வீழ்ந்த.

     அசனி - இடி. அனகன் -இராமன்.                    (11-10)