4912. | வேல்,வாள், சூலம், வெங்கதை, பாசம், விளிசங்கம் கோல், வாள்சாபம், கொண்ட கரத்தாள் வடகுன்றம் போல்வாள், திங்கள்-போழின் எயிற்றாள், புகைவாயில் கால்வாள்;காணின் காலனும் உட்கும்கதம் மிக்காள். |
வேல் வாள் சூலம்- வேலும்வாளும் சூலமும்; வெங்கதை பாசம் - கொடிய கதையும், பாசமும்; விளி சங்கம் - சேனைகளை அழைக்கின்ற சங்கும்; கோல் வாள் சாபம் - அம்பும் கொடிய வில்லும்; கொண்ட கரத்தாள் - ஏந்திய கையையுடையவளும்; வடகுன்றம் போல்வாள் - மேருமலையை ஒத்தவளும்; திங்கள் போழின் -சந்திரனின் பிளவைப் போன்ற; எயிற்றாள் -பற்களையுடையவளும்; வாயில் புகை கால்வாள் - வாயில் புகையைக்கக்குபவளும்; காணின் - உற்றுப் பார்ப்பாளாயின்; காலனும் உட்கும் -யமனும் பயப்படும்; கதம் மிக்காள் - கோபம் மிக்கவளும். வாள் இருமுறை இக்கவிதையில் காட்சி தருகிறது. இரண்டாம் வாள் கொடுமை எனும் பொருள் தருகிறது. கோல் 'தோல்' என்ற பாடம் ஒரு பிரதியில் காணப்படுகிறது. தோல் - கேடயம், இப்பாடம் சிறக்கும்போலும். போழ் - பிளவு. திங்கட்பிளவு - பிறைச்சந்திரன். காணில் - எமன் செயலாக்கினும் அமையும். (78) |