4921.

கொல்வாம்; அன்றேல் கோளுறும் இவ்ஊர் எனல்
                                 கொண்டாள்;
'வெல்வாய், நீயேல், வேறி'என, தன் விழிதோறும்
வல்வாய்தோறும், வெங்கனல் பொங்க, மதிவானில்
'செல்வாய்' என்னா மூவிலை வேலைச்
                               செலவிட்டாள்.*

(இலங்கைத் தேவி)

     கொல்வாம் -நாம்இவளைக் கொல்வோம்; அன்றேல் -
கொல்லப்படாமல் விட்டு விட்டால்; இ ஊர் - இந்த இலங்கை; கோள் உறும்
-
(இவனால்) அழிக்கப்படும்; எனல் கொண்டாள் - என்று மனத்தி்லே
எண்ணி; வெல்வாயேல் - என்னை வெற்றி கொள்ள முடிந்தால்; நீ வேறி -
நீ வெல்லுக; என - என்று கூறி; விழிதோறும் - கண்கள் தோறும்;
வல்வாய்தோறும் -
கொடிய வாய்கள் தோறும்; வெங்கனல் பொங்க -
கொடிய நெருப்பு மூண்டு எரிய; மூ இலை வேலை - மூன்று
தலைகளையுடைய சூலத்தை; மதி வானில் - சந்திரன் ஒளி வீசும் வானிலே;
செல்வாய் என்னா -
செல்லுவாயாக என்று கூறி; செலவிட்டாள் -
அனுமன்மேல் வீசி எறிந்தாள்.

     'சூலம்' முத்தலைபெற்று, வேல்போல இருத்தலின் வேல் என்று
கூறினான்.                                             (87)