| 4922. | தடித்துஆம்என்னத் தன்எதிர் செல்லும் தழல்வேலைக் கடித்தான்,நாகம் விண்ணில் முரிக்கும் கலுழன் போல் ஒடித்தான்கையால் - உம்பர் உவப்ப, உயர்காலம் பிடித்தாள்நெஞ்சம் துண்ணென, - எண்ணம் பிழையாதான். |
எண்ணம்பிழையாதான் -நினைவாலும் தவறு செய்யாத அனுமன்; உம்பர் உவப்ப - தேவர்கள் மகிழும்படி; உயர்காலம் பிடித்தாள் - சிறந்த பாசத்தைப் பற்றிய இலங்கைத்தேவி; துண் என - திடுக்கிடும்படியாகவும்; தடித்து ஆம் என்ன - மின்னலே ஒப்பு என்று கூறும்படி; தன் எதிர் செல்லும் - தன் முன்னே வரும்; தழல்வேலை - நெருப்பைக் கக்கும் வேலாயுதத்தை; கடித்தான் - பற்களால் கடித்து; கையால் - கைகளால்; விண்ணில் - ஆகாயத்தின்கண்; நாகம் - பாம்புகளை; முரிக்கும் கலுழன்போல் - முறிக்கின்ற கருடனைப் போல; ஒடித்தான் - துண்டு துண்டாகச் சிதைத்தான். காலம் - பாசம்."சூலம் எனில் அன்று. இது தொல்லை வரும் காலம்' (கம்ப . 8378) அண் - கழகம்) காலம் பிடித்தாள் - அச்சூலத்தை நீண்ட காலம் பிடித்தவள் என்று கூறப் பெற்றவுரை நன்றேல் கொள்க. காலம் பிடித்தாள் (என்பதை) - சூலம் பிடித்தான் என்று பாடபேதம் செய்தாரும் உளர். (88) |