'மதுவனம்தன்னை இன்னே மாட்டுவித்தனை, நீ' என்னா, கதுமென வாலிசேய்மேல் எறிந்தனன், கருங் கற் பாறை; அதுதனைப்புறங்கையாலே அகற்றி, அங்கதனும் சீறி, ததிமுகன்தன்னைப்பற்றிக் குத்தினன், தடக் கைதன்னால்.
ததிமுகன் அங்கதன் போர். (11-12)