4941.

திருத்தியபளிக்கு வேதி
     தெள்ளியவேல்கள் என்ன
கருத்து இயல்புஉரைக்கும்
     உண்கண்கருங்கயல், செம்மைகாட்ட
வருத்தியகொழுநர் தம்பால்
     வரம்பின்றி வளர்ந்த காம
அருத்தியபயிர்க்கு நீர்போல்
     அருநறவுஅருந்து வாரை

     திருத்திய -நன்றாகஅமைக்கப் பெற்ற; பளிக்கு வேதி - பளிங்குத்
திண்ணை; தெள்ளிய வேல்கள் என்ன - கூர்மையான வேல்களைப் போல
வருத்த அதை மறக்க; கருத்து இயல்பு - மனத்தின் இயற்கையை; உரைக்கும்
-
வெளிப்படுத்துகின்ற; உண் - மை பூசப் பெற்ற; கண் கருங்கயல் -
கண்ணாகிய கயல் மீன்கள்; செம்மை காட்ட - ஊடற் சீற்றத்தால் ஆகிய,
செந்நிறத்தை வெளிப்படுத்தும்படியாக; வருத்திய - (பரத்தையின் தொடர்பால்)

துன்புறுத்திய; கொழுநர் தம்பால் - கணவர் மாட்டு; வரம்பு இன்றி -
எல்லையில்லாமல்; வளர்ந்த காமம் - பெருகிய காமமாகிய; பயிர்க்கு நீர்
போல் -
பயிரில் பாய்ச்சப்படும் தண்ணீரைப் போலவும்; அருத்திய - (தாம்)
விருப்பம் கொண்ட; அருநறவு - சிறந்த மதுவை; அருந்துவாரை -
உண்பவராகிய அரக்க மகளிரையும்.

     கருங்கயல் -பிரிவைக் காட்டுகிறது. வருத்துதல் - பரத்தையர்பால்
பிரிந்து வருத்துதல். அடிகள், கண்ணகி கருங்கயல், மாதவி செங்கண் என்றார்
(இ்ந்திர - 237) கருங்கண் என்றது கண்ணகிக்குப் புணர்ச்சியின்மையால்
செங்கண் என்று உரைத்தது மாதவிக்குப் புணர்ச்சி விதும்பலால் என்று
அரும்பதவுரை பேசும். கயற்கண் அன்புப் பார்வையைக் காட்டும். வேல்வழி
சீற்றத்தைக் காட்டும். (கம்ப.983) இது விப்பிரலம்பம் (பிரிவு)        (107)