கோவையும்குழையும் மின்ன, கொண்டலின் முரசம் ஆர்ப்ப, தேவர்நின்று ஆசிகூற, முனிவர்சோபனங்கள் செப்ப, பாவையர்குழாங்கள் சூழ, பாட்டொடுவான நாட்டுப் பூவையர் பலாண்டுகூற, புதுமணம்புகுகின்றாரை-
கொண்டலின் -மேகத்தைப்போல; முரசம் ஆர்ப்ப - முரசங்கள்முழங்கவும்; நின்று - நின்றுகொண்டு; தேவர் ஆசிகூற - தேவர்கள் ஆசிகள்கூறவும்; முனிவர் - முனிவர்கள்; சோபனங்கள் செப்ப - மங்கலவாழ்த்துக்கள் பாடவும்; பாவையர் குழாங்கள் - பெண்கள் கூட்டங்கள்;பாட்டொடு - பாட்டுக்களோடு; சூழ - சுற்றியிருக்கவும்; வானநாட்டுப்பூவையர் - தேவலோகப் பெண்கள்; பலாண்டு கூறு - பல்லாண்டுகள் பாட;கோவையும் - முத்துக்களாலும் மணிகளாலும் அமைந்த மாலைகள்; குழைகள்மின்ன - மகரக் குழைகள் ஒளி வீசவும்; புதுமணம் புணர்கின்றாரை -புதுமணம் புரிகின்றவர்களையும். (120)