| 4963. | தடைபுகு மந்திரம் தகைந்த நாகம்போல், இடைபுகல் அரியதுஓர் உறக்கம் எய்தினான், கடையுக முடிவு எனும்காலம் பார்த்து அயல் புடைபெயராநெடுங் கடலும் போலவே. |
யுகம் முடிவு எனும்- யுகங்களின் முடிவு என்று கூறப்படும்; கடை காலம் ஓர்ந்து - பிரளய காலத்தை எதிர்பார்த்து; அயல் புடை பெயரா - கரையைவிட்டுச் செல்லாத; நெடும் - பெரிய; கடல் போல - சமுத்திரத்தைப் போலவும்; தடைபுகு மந்திரம் - தடையைச் செய்யும் மந்திரத்தால்; தகைந்த - கட்டுப்பட்ட; நாகம் போல் - நல்ல பாம்பைப் போலவும்; இடை - இடையூறு; புகல் அரியது - புகவியலாத; உறக்கம் எய்தினான் - உறக்கத்தைஅடைந்தான். (129) |