உன்னம்,நாரை, மகன்றில், புதா, உளில் அன்னம் கோழிவண்டானங்கள், ஆழிப்புள் கின்னரம்குரண்டம் கிலுக்கம், சிரல் சென்னம்,காகம், குணாலம் சிலம்புமே
(அவ்வகழியில்)
உன்னம் -உன்னப்பறவைகளும்; நாரை - பலவகையான நாரைப்பறவைகளும்; மகன்றில் - அன்றில் பறவைகளும்; புதா - குருகுகளும்;உளில் - உள்ளான் பறவைகளும்; அன்னம் - அன்னப் பறவைகளும்; கோழி- நீர்க்கோழிகளும்; வண்டானங்கள் - பெருநாரைகளும்; ஆழிப்புள் -சக்கரவாளப் பறவைகளும்; கின்னரம் - கின்னரப் பறவைகளும்; குரண்டம் -கொக்குகளும்; கிலுக்கம் - கிலுக்கப்பறவைகளும்; சிரல் - மீன் கொத்திப் பறவைகளும்; சென்னம் - நீர்ப் பறவைகளும்; காகம் - காக்கைகளும்; குணாலம் - குணாலம் என்னும் நீர்ப்பறவையும்; சிலம்பும் - ஒலிக்கும். அவ்வகழியில்,உன்னம் முதலான பறவைகள் ஒலிக்கும். வண்டானங்கள்என்பதில் உள்ள 'கள்' அசை. 'முருகா எனும் நாமங்கள்' (கந்தர் அலங்காரம்)என்னும் தொடரில் உள்ள கள்ளும் அது. உருகச் சுட்டிடுங்கள் (சிந்தாமணி27773. இனியர்) (151)