கலி விருத்தம்

5001.

போர் இயற்கை இராவணன் பொன்மனை
சீர் இயற்கைநிரம்பிய திங்களா
தாரகைக் குழுவின்தழுவித் தொடர்
நாரியர்க்குஉறைவுஆம் இடம் நண்ணினான்.

(அனுமன்)

     போர் இயற்கை -போர்புரிதலை இயல்பாகக் கொண்ட; இராவணன்
-
 இராவணனுடைய;  பொன்மனை - அரண்மனை; சீர் - சிறப்பும்;
இயற்கை -
அழகும்; நிரம்பிய - நிறைந்துள்ள; திங்களா - சந்திரன்
போல;தாரகைக்குழுவின் - நட்சத்திரக் கூட்டங்களைப் போல; தழுவித்
தொடர் -
சுற்றிலும்அணைத்துத் தொடர்ந்துள்ள; நாரியர்க்கு -
மகளிர்களுக்கு; உறைவு ஆம்இடம் - இருப்பிடமாய் அமைந்த இடத்தை;
நண்ணினான் -
அடைந்தான்.

     இராவணன் வீடுசந்திரனைப் போலவுள்ளது. அவன் காதலியர்களின்
இல்லங்கள் நட்சத்திரங்களைப் போல் இருந்தன என்க. திங்கள் ஆய் -
என்பதிலுள்ள 'ஆய்' என்பது உவம உருபுப் பொருளைத் தந்தது. 'எனக்கு
ஆவார் ஆர் ஒருவர்' என்னும் பொய்கைப் பிரான் வாக்கை உன்னுக. (திவ்ய
முதல் திரு 89)                                            (167)