என்றுஉரைத்து, இடர் உழந்து இருக்கும் ஏல்வையின் வன் திறல்ததிமுகன் வானரேசன் முன், தன் தலைபொழிதரு குருதிதன்னொடும், குன்று எனப்பணிந்தனன், இரு கை கூப்பியே.
மதுவனக் காவலன்ததிமுகன் சுக்ரீவனைக் காணல். இது முதல் இருபது பாடல்கள் ததிமுகன் வருகையால் வானரர் சீதையைக் கண்டு இனிது திரும்பிய படியைக் குறிப்பால் அறிந்தது கூறப்பெறுகிறது. (19-1)