இராவணனின் உரிமைமகளிராம் அரக்கியரின் நிலைமை 5013. | இனையதன்மை இயக்கியர் ஈண்டிய மனைஓர் ஆயிரம்ஆயிரம் வாயில் போய் அனையவன் குலத்துஆயிழையார் இடம் நினைவின்எய்தினன் - நீதியின் எய்தினான். |
நீதியின்எய்தினான் - நீதியில் நடக்கும்அனுமன்; இனைய தன்மை -இப்படிப்பட்ட இயல்பைக் கொண்ட; இயக்கியர் - யட்சப் பெண்கள்; ஈண்டிய- தங்கியிருக்கும்; ஆயிரம் ஆயிரம் - பத்து லட்சம்; மனைவாயில் -வீடுகளின் வாசல்களில்; போய் - நுழைந்து சென்று; அனையவன் குலத்து -அந்த இராவணனின் குலத்தில் பிறந்த; ஆயிழையார் இடம் - அரக்கியர்தங்கிய தெருவை; நினைவின் - எண்ணத்தைப் போல் (விரைவாக); எய்தினன்- அடைந்தான். அனுமன்இயக்கியர்கள் தங்கிய வீடுகளை ஆராய்ந்து பார்த்தபின் அரக்கியர்கள் தங்கிய தெருவை அடைந்தான். இல்வாய் என்பது வாயில் என மாறி நின்றது. உள்ளூர், முற்பகல், பிற்பகல், நுனிக்கொம்பர், கடைக்கண், கீழ்நீர் என்பனவும் இப்படிப்பட்டன. இங்ஙனம் வருவதை இலக்கண மரூஉ என்பர். ஓர் - அசை (179) |