அரக்கியர் நிலை

அறுசீர்விருத்தம்

 5014.

எரிசுடர்மணியின் செங்கேழ்
    இளவெயில்இடைவிடாது

விரியிருள்பருகி, நாளும்
    விளக்கின்றி விளங்கும் மாடத்து,
அரிவையர் குழுவும்நீங்க
     ஆசையும்தாமுமே ஆய்,
ஒருசிறை இருந்து,போன
     உள்ளத்தோடு ஊடுவாரும்.

     எரிசுடர் -நெருப்பைப் போன்ற; மணியின் - மணிகளின்; செம்கேழ்
இளவெயில் -
சிவந்த நிறத்தையுடைய இளமையான வெயிலானது; இடை
விடாது -
இடை விடாமல்; விரி இருள் பருகி - பரவிய இருளைக் குடிப்ப
(அதனால்); நாளும் - எப்போதும்; விளக்கு இன்றி - விளக்குகள் இல்லாமல்;
விளங்கும் மாடத்து - விளங்குகின்ற மாளிகையில்; அரிவையர் குழுவும்
நீங்க -
மகளிர் கூட்டம் விலகிச் செல்ல; ஒரு சிறை இருந்து - ஒரு
பக்கத்தில் இருந்து கொண்டு; ஆசையும் தாமுமே ஆய் - காதலும்
தாங்களுமாக; போன உள்ளத்தோடு - (இராவணன் பால் சென்ற)
மனத்துடன்; ஊடுவாரும் - பிணங்குபவர்களும்.

     குழுவும் - என்பதில் உள்ள 'உம்' அசை. காமக்கடல் மன்னும் உண்டே
(குறள்) 'உம்' அசை நின்று பரிமேலழகர் வரைந்தார். அரிவையர் குழு நீங்கத்
தாமும் தம் ஆசையுமாக இருந்தோர் இராவணன்பால் சென்ற உள்ளத்தை
வெறுத்தனர். காமத்துப்பால், நெஞ்சொடு கிளத்தல் இப்பாடலுக்கு மூலம். (180)