5020. | தென்நகுகுடம்,உள் பாடல் சித்தியர்இசைப்பத் தீம்சொல் பன்னக மகளிர்வள்வார்த் தண்ணுமைப்பாணி பேண பொன்னகர்த்தரளப் பந்தர் கற்பகப்பொதும்பர், பொன் - தோள் இன்நகை அரம்பைமாரை ஆடல்கண்டுஇருக்கின் றாரும். |
கற்பகப்பொதும்பர் - கற்பகச் சோலையில்;பொன் நகர் - அமராவதிநகரிலிருந்து கொணர்ந்த; தரளப் பந்தர் - முத்துப் பந்தலில்; சித்தியர் -சித்தியர் குல மகளிர்; தென் நகு குடம் - அழகு மிக்க குடமுழாவின் தாளஒத்துக் கேற்று; உள் பாடல் - உள்பட்ட பாடலை; இசைப்ப - பாட; தீம்சொல் - இனிய சொற்கள் பேசும்; பன்னக மகளிர் - நாகலோகத்து மகளிர்;வள்வார் - வலிய வாரால் கட்டப் பெற்ற; தண்ணுமை பாணி - மத்தளத்தின்தாளங்கள்; பேண - முழக்க; பொன் தோள் - அழகிய தோள்களையும்; இன்நகை - இனிய பற்களையும் உடைய; அரம்பைமாரை - விண்ணுலக மகளிர்;ஆடல் கண்டு - ஆடுதலைப் பார்த்து; இருக்கின்றாரும் -இருப்பவர்களையும். 'தென்ன' என்றுஅமிர்தப் பாடல்' என்பதனைப் பாடம் கொண்டு அதனுடன்கூடிய இனிய பாடல் என்க. 'தென்ன' என்பது ஆளத்தி தென்ன என்னும் இசை வளர்த்து என்று சிலம்பு மேற்கோள் பகரும். (வேனிற் - 35) வள்வார் - வலிமை மிக்கவார். 'வள்வார் முரசமொடு' என்றும் வருகின்ற (புற - வெண். 3-2) கொளுவுரை காண்க. பாணி - தாளம். கொட்டும் அசையும் தூக்கும் அளவும் - ஒட்டப் புணர்ப்பது பாணியாகும். (பஞ்ச மரபு 190 பக்) (186) |