5024.

தயிர்நிறத்து உறு கள் உள்ளம்
     தள்ளுற,அறிவு தள்ளிப்,
பயிர்உறத்தெய்வம் என்மேல்
     படிந்ததுபார்மின் என்னா,
உயிர்உயிர்த்துஇரண்டு கையும்
     உச்சிமேல்உயர நீட்டி,
மயிர்சிலிர்த்து, உடலம் கூசி
    வாய்விரித்து ஒடுங்கு வாரும்.

     தயிர்நிறத்து உறுகள் - தயி்ரின் நிறத்தைப் பெற்ற மிக்க
காழ்ப்புடையகள்; உள்ளம் தள்ளுற - உள்ளத்தைத் தளரச்செய்ய; தம் -
தம்முடைய;அறிவு தள்ளி - அறிவானது தடுமாற்றம் அடைந்து; பயிர் உற -
தெய்வங்களை அழைத்தல் மிக (அதன்பின்); என்மேல் - என்னிடத்தில்;
தெய்வம் படிந்தது - தெய்வம் சார்ந்துள்ளது; பார்மின் - காணுங்கள்;
என்னா - என்று கூறி; உயிர் உயிர்த்து - பெருமூச்சுவி்ட்டு; உச்சிமேல் -
தலையின்மேல்; இரண்டு கையும் - இரண்டு கைகளையும்; உயர நீட்டி -
உயரும்படி நீட்டி; மயிர்சிலிர்த்து - மயிரானது சிலிர்க்கப் பெற்று; உடலம்
கூசி -
மேனி கூச்சம் அடைந்து; வாய் விரித்து - வாயைத் தி்றந்து;
ஒடுங்குவாரும் - ஓய்ந்து போகின்றவர்களும். பிரிவாற்றாமையின்
அதீதநிலை.                                             (190)