'நீலனும், குமுதனும், நெடிய குன்றமே போல் உயர்சாம்பனும், புணரி போர்த்தென மேல் எழுசேனையும், விரைவின் வந்து உறா, சால்புடைமதுவனம்தனை அழிப்பவே.
நீலன், குமுதன்,சாம்பன், வானர சேனைகள் மதுவனம் அழித்தார்என்று ததிமுகன் கூறல். (19-3)