5063..

ஏழு நூறுஓசனை சூழ்ந்து
     எயில்கிடந்தது இவ் இலங்கை
வாழும் மா மன்உயிர், யான்
     காணாதமற்று இல்லை;
ஊழியான்பெருந்தேவி
     ஒருத்தியுமேயான் காணேன்
ஆழி தாய், இடர்- ஆழியிடையே
     வீழ்ந்துஅழிவேனோ ?

     ஏழுநூறு ஓசனை - எழுநூறு யோசனை அளவுக்கு; எயில் ஆழ்ந்து
-
 மதிலால் சூழப்பெற்று; கிடந்தது - பரவியிருப்பதாகிய; இவ் இலங்கை -
இந்த இலங்கை மாநகரில்; வாழும் - வாழ்கின்ற; மா மன்னுயிர் - சிறந்த
நிலைபெற்ற பிராணிகளுள்; யான் காணாத - யான் பார்த்திராதவை; இல்லை
-
கிடையாது; ஊழியான் - ஊழிகளின் தலைவனான இராமபிரானின்;
பெருந்தேவி -
பெருந்தேவியாகிய; ஒருத்தியுமே - ஒப்பற்றவள் மட்டுமே;
யான் காணேன் -
நான் பார்க்கவில்லை; ஆழிதாய் - (நீர்) கடலைக் கடந்து;
இடர் ஆழியிடையே -
துன்பமாகிய கடலில்; வீழ்ந்து - அழுந்தி;
அழிவேனோ -
இறப்பேனோ.

     ஓசனை - நான்குகாதம். 'ஓசனை கமழும்' என்னும் சிந்தாமணித்
தொடர்க்கு 'நான்கு காதம் எல்லை நாறும்' என்று இனியர் உரை வகுத்தார்.
மற்று - அசை.

     உயிர் என்றதுபிராணிகளை - உயிர் எல்லாம் தன் உயிர் என நல்கும்
அந்தணன் (வனம்புகு - 22).

     பெருந்தேவி -பட்டத்தரசி. உடன் முடிகவித்த இயற்பெருந்தேவி
(பெருங்கதை 2.4.24).                                         (229)