508.

'பண் தரு கிளவியாள்தன்னைப் பாங்குறக்
கண்டனர்; அன்னதுஓர் களிப்பினால், அவர்
வண்டு உறைமதுவனம் அழித்து மாந்தியது;
அண்டர் நாயக !இனி அவலம் தீர்க' என்றான்.

     சீதையைக் கண்டமகிழ்ச்சியால் வானரர் 'மதுவனம் அழித்து மாந்தியது'
என்று சுக்ரீவன் உணர்த்துதல்.                                 (19-8)